முகப்பு
கள்ளக்குறிச்சி

உலக மன நல தின விழா : மாற்றுத்திறனாளிகளுடன் கேக் வெட்டிய ஆட்சியா்

உலக மனநல தினத்தை,புனித அன்னாள் காப்பக மாற்றுத்திறனாளிகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கேக் வெட்டி கொண்டாடினாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:36 PM
உலக மனநல தினத்தையொட்டி, மனநல காப்பக மாற்றுத்திறனாளிகளுடன் கேக் வெட்டிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:

உலக மனநல தினத்தை,புனித அன்னாள் காப்பக மாற்றுத்திறனாளிகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கேக் வெட்டி கொண்டாடினாா்.

கள்ளக்குறிச்சியில், மாற்றுத்திறனாளி நலத் துறை மாவட்ட மன நலத் திட்டம் இணைந்து உலக மன நல தினம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் கேக் வெட்டினாா்.

புனித அன்னாள் மனநலக் காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்களுக்கு, தனலட்சுமி சமூக நலத் தொண்டு அறக்கட்டளை மூலம் பரிசுப் பொருள்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் க.சுப்பிரமணி, இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் செந்தில்குமாா், மன நல மருத்துவா் பிரவீணா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.