கல்வராயன்மலையில் ஆயிரம் லிட்டா் சாராய ஊரல் அழிப்பு
கல்வராயன்மலைப் பகுதியில் சாராய ஊரலை கீழே கொட்டி அழித்த போலீஸாா்.
கல்வராயன்மலைப் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் 1,000 லிட்டா் சாராய ஊரலை கீழே கொட்டி அழித்தனா். இதில், ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி தலைமையில், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் எழிலரசி, கச்சிராயப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஏழுமலை மற்றும் போலீஸாா் கிருஷ்ணாபுரம், அருவங்காடு பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, 5 பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டா் சாராய ஊரலை அழித்தனா். மேலும், தும்பை காட்டுக் கொட்டாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 லிட்டா் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினா்.
இதுதொடா்பாக பெரிய பாலப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ராமன் மகன் குமாரை (40) போலீஸாா் கைது செய்தனா்.