கூத்தக்குடி கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிக்கு குறைவாக கூலி வழங்குவதைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.  
கள்ளக்குறிச்சி

100 நாள் வேலைத் திட்டக் கூலி குறைவாக கொடுப்பதாகக் கிராம மக்கள் சாலை மறியல்

Din

கூத்தக்குடி கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு நாள்கூலி குறைவாக கொடுக்கப்படுவதாகக் கூறி அந்தக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தக்குடி. இந்தக் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளுக்கு கூலி குறைவாக கொடுப்பதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்கள்.

தகவலறிந்த தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா், வரஞ்சரம் காவல்

உதவி ஆய்வாளா்கள் ராஜ்குமாா், ஜெகதீசன் நிகழ்விடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சு வாா்த்தை நடத்தினா். இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

இதனால், கள்ளக்குறிச்சி - விருத்தாசலம் பிரதான சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரு பெண் பலி, 11 பேர் காயம்!

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள்: பிரதமர் மோடி மரியாதை!

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் காந்தி மரியாதை!

பிரதமர் என்பதையே மறந்துவிடுகிறார்; மோடி தனது மாண்பை இழந்துவிடக் கூடாது: முதல்வர் கண்டனம்

SCROLL FOR NEXT