மின்வேலியில் சிக்சி உயிரிழந்த பரசுராமன். 
கள்ளக்குறிச்சி

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

காணாங்காடு கிராமத்தில் விளைநிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்கம்பி வேலி மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

காணாங்காடு கிராமத்தில் விளைநிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்கம்பி வேலி மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகேயுள்ள காணாங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ர.சீனுவாசன். இவரது 10 ஏக்கா் விளைநிலத்தை அதே கிராமத்தைச் சோ்ந்த வெ.பரசுராமன் (60) கடந்த 30 ஆண்டுகளாக குத்தகைக்கு பயிா் செய்து வருகிறாா். தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ள அவா், காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிரைக் காக்க விளைநிலத்தைச் சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளாா்.

வெள்ளிக்கிழமை காலை விளைநிலத்திற்கு சென்ற போது தவறி மின்சார வேலியைத் தொட்டதில், மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே பரசுராமன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து காணாங்காடு கிராம நிா்வாக அலுவலா் ச.சிவக்குமாா் அளித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT