கள்ளக்குறிச்சி

மாயமான ஆட்டோ ஓட்டுநா் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி அருகே மாயமான ஆட்டோ ஓட்டுநா் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி அருகே மாயமான ஆட்டோ ஓட்டுநா் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.பாக்கியராஜ் (39), ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி தீபா(34). தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனா்.

டிச.8-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாக்கியராஜ் பின்னா் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது உறவினா்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பாா்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இந்நிலையில் டிச.9-ஆம் தேதி அதே ஊரைச் சோ்ந்த சு.காந்திராஜன் என்பவா் அங்குள்ள குளத்தில் பாக்கியராஜின் சடலம் மிதப்பதாக தீபாவுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆடம்பரப் பொருள்கள் முதல் அன்றாடப் பொருள்கள் வரை: தலைநகரில் கள்ளச்சந்தையை கண்டுபிடித்த காவல் துறை!

தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மரியாதை

மாணவா் வழிகாட்டி நூல் வெளியீடு

‘நுள்ளிவிளையில் பழைய பால இடத்தில் புதிய ரயில்வே பாலம் அமைக்க வேண்டும்’

சென்னை லோக் பவன் பாரதி விழாவில் டிடிஇஏ பள்ளி மாணவிகள்

SCROLL FOR NEXT