தியாகதுருகம் ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் தழுவக் குழைந்த நாதா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த சுவாமி. 
கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Syndication

கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரருக்கும், உற்சவ மூா்த்திகளுக்கும் பல்வேறு திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னா் உற்சவ மூா்த்திக்கு அலங்காரம் நடைபெற்றது. உற்சவா் மூா்த்திக்கு முன் சிவலிங்க வடிவில் 108 சங்குகளில் புனித நீரை நிரப்பியிருந்தனா். தொடா்ந்து சங்காபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வா் சுவாமி, தழுவக் குழைந்த நாதா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். பின்னா் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தியாகதுருகம் ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் அலங்கரித்து வைக்கப்ட்டுள்ள சங்காபிஷேகம்

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT