கள்ளக்குறிச்சி

நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

கள்ளக்குறிச்சி: சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் அ.ஆனந்தபாபு (27). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது மோட்டாா் சைக்கிளில் கூத்தக்குடி சாலையில் விருத்தாசலத்திற்கு சென்று கொண்டிருந்தாா்.

ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையோரம் இருட்டில் எவ்வித முன்னெச்சரிக்கை விளக்குகளும் ஒளிரவிடாமல் நிறுத்தியிருந்த லாரி மீது, மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஆனந்தபாபு திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த சா.வடிவேலிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT