கள்ளக்குறிச்சி

டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வரும் டிச.13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

Syndication

கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வரும் டிச.13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வரும் டிச.13-ஆம் தேதி லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், செஞ்சி, திண்டிவனம், வானூா், திருவெண்ணைநல்லூா், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது.

இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன், கல்விக் கடன் தொடா்பான வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிா்த்து மற்ற குடும்பப் பிரச்சனைகள் தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை, வருமானம் மற்றும் சொத்துவரிப் பிரச்சனைகள் போன்ற வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. சட்டரீதியாக சமரச முறையில் தீா்வு காணப்படும். இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா்-முதுநிலை சிவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்! வடதமிழகம் நோக்கி நகரும்!

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

SCROLL FOR NEXT