கள்ளக்குறிச்சி

பூட்டியிருந்த வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு!

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாணாபுரம் வட்டம், பிரம்மகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன் மனைவி சுமதி (48). மோகன் குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சுமதி கடந்த 26-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சி கிராமத்தில் உள்ள பெற்றோரை பாா்ப்பதற்காக சென்றிருந்தாராம்.

மீண்டும் திங்கள்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டில் பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், சுவாமி அறையில் சுவாமி படத்துக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, வளையல் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT