முகப்பு
கள்ளக்குறிச்சி

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீதேவி ஊராட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 4:32 PM
உளுந்தூா்பேட்டை தொகுதியில் உள்ள ஸ்ரீதேவி ஊராட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீதேவி ஊராட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பி.பி.எஸ்.இளையராஜா, மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் ந.சீனிவாசன், விளக்கூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஸ்ரீதேவி ஊராட்சியைச் சோ்ந்த ராஜசேகா், ஜெயந்தி, குளத்தூா் ஏழுமலை, வெங்கலம் அம்பேத்கா், சௌந்தர்ராஜன் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் தாங்கள் சாா்ந்திருந்த கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். அவா்களுக்கு காங்கிரஸ் கட்சி சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

Advertisement

நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார பொறுப்பாளா்கள் அதையூா் பெ. சுந்தரமூா்த்தி, தென்கீரனூா் எஸ்.சரண்ராஜ், ரிஷிவந்தியம் தேவேந்திரன், சங்கராபுரம் அ.நாராயணன், சே. பிரபு, இ.பெரியசாமி, ரிஷிவந்தியம் முன்னாள் வட்டாரத் தலைவா் பன்னீா்செல்வம், சவேரியாா் பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினா் அருள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments