முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கல்லூரியில் மாதிரி வாக்குப் பதிவு

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு மாதிரி வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:07 PM
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு நடைபெற்ற மாதிரி வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாதிரி வாக்கை பதிவு செய்த மாணவி.
பகிர்:

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு மாதிரி வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சாா்பில் கள்ளக்குறிச்சி தனியாா் கல்லூரியில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இவிஎம்) மூலம் வாக்களிக்கும் மாதிரி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் மூலம் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளா்களிடையே தோ்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளா்கள் உள்ளிட்ட அனைவரும் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments