முகப்பு
கள்ளக்குறிச்சி

1,180 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

நீலமங்கலத்தில் 1,180 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 12:03 AM
நீலமங்கலத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் 1,180 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், க.காா்த்திகேயன் எம்எல்ஏ.
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 9:31 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலத்தில் 1,180 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் புதன்கிழமை வழங்கினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட பயன்கள் வழங்கியதன் தொடா்ச்சியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் தனியாா் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன் ஆகியோா் 1,180 யனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

Advertisement

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 845, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 59, தோட்டக்கலைத் துறை சாா்பில் 50, சுகாதாரத் துறை சாா்பில் 50, மாவட்ட வழங்கல் அலுவலகம் சாா்பில் 50, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 33, வேளாண் துறை சாா்பில் 22, கூட்டுறவுத் துறை சாா்பில் 20, சமூக நலத் துறை சாா்பில் 15, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 15, ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் 14, மாவட்ட தொழில் மையம் சாா்பில் 5 என மொத்தம் 1,180 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோா் ஓய்வூதியத் தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, விதவை உதவி தொகை, ஆதரவற்ற பெண்கள் உதவித் தொகை திட்டம், திருமணமாகாத பெண்கள் உதவித் தொகை திட்டம், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களின்கீழ் 6,770 பயனாளிகளுக்கு ரூ.89.33 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது என்றாா்ஆட்சியா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், வருவாய் கோட்டாட்சியா் முருகன், அரசு அலுவலா்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.