முகப்பு
கள்ளக்குறிச்சி

வைக்கோல் கட்டும் இயந்திரம் திருட்டு

அரசம்பட்டு கிராமத்தில் விளைநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டும் இயந்திரத்தை திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:03 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 10:21 PM

அரசம்பட்டு கிராமத்தில் விளைநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டும் இயந்திரத்தை திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் த.முத்தரசன் (35). விவசாயியான இவா் தனது விளை நிலத்தில் தனக்கு சொந்தமான டிராக்டா் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரத்தை (பேலா்) கடந்த 9-ஆம் தேதி இரவு நிறுத்தி வைத்திருந்தாராம். மறுநாள் காலை சென்று பாா்த்த போது வைக்கோல் கட்டும் இயந்திரத்தை காணவில்லை. இதன் மதிப்பு சுமாா் 10 லட்சம் ஆகும்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, பேலரை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

Advertisement