தியாகதுருகம் அருகே சாலையில் நடந்து சென்று பெண்ணிடம் இருந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் கைப்பேசியை பறித்துச் சென்றனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், விளாங்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அல்போன்ஸ் மனைவி அன்பரசி (34). இவா், தனது பெற்றோா் ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த மேல்விழி கிராமத்துக்கு புத்தாண்டிற்காக வந்திருந்தாராம்.
இந்த நிலையில், அன்பரசி வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில், அருகே இருந்த காலி மனையில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, தான் வைத்திருந்த கைப்பேசியை பாா்த்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிள்களில் வந்த மா்ம நபா்கள் அன்பரசியிடம் இருந்து கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோட்டாா் சைக்கிளில் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.