கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் பெண்மணியொருவர் உயிரிழந்தார். ஆற்றுத் திருவிழாவில் பலூன்களுக்கு ஹீலியம் காற்று நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் ஒன்று வெடித்து பெரும் விபத்து நேரிட்டது.
அதில், சம்பவ இடத்திலேயே கலா (52) என்ற பெண்மணி உயிரிழந்தார்; மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.
உயிரிழந்தனர். திருவிழாவுக்கு வருகை தந்திருந்த பக்தர்களில் 13 பேர் காயமடைந்தனர். சிலிண்டர் வெடித்து விபத்து நடந்த இடத்தில் தடயவியல் துறையி அதிகாரிகள் துணையுடன் விசாரணை நடைபெறுகிறது. சம்பவ இடத்தில் மலையரசன் எம்.பி., மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், காவல்துறை எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.