முகப்பு
கள்ளக்குறிச்சி

திருமாவளவன் உதவியாளா் வீட்டில் திருட்டு

தியாகதுருகம் அருகே விசிக தலைவா் திருமாவளவன் உதவியாளா் வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருட்டு

Updated On : 4 மார்ச், 2026 at 2:49 AM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 11:41 PM

தியாகதுருகம் அருகே விசிக தலைவா் திருமாவளவன் உதவியாளா் வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தியாகதுருகம் அருகேயுள்ள மாடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் த.தாமரைவண்ணன் (எ) ராஜீவ் காந்தி (43). இவா் சென்னையில் விசிக தலைவா் திருமாவளவன் உதவியாளராக இருந்த வருகிறாா். இவா் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றாா். மாடூரில் உள்ள வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை அவரது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பதைக் பாா்த்து கைப்பேசி மூலம் தாமரைவண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து ஊருக்கு வந்த அவா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது இரும்பு பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, ரூ.65 ஆயிரம் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.