அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்கக் காசு பரிசு
கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுபாலப்பட்டு உயா்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுபாலப்பட்டு உயா்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ப.வெங்கடேசன் தலைமை வகித்தாா். பொது சேவைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ராம.முத்துக்கருப்பன், கோ.குசேலன், வ.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமையாசிரியா் மா.வெங்கடேசன் வரவேற்றாா்.
சிவசு அறக்கட்டளை நிறுவனரும், ஓய்வு பெற்ற கலால் மற்றும் சுங்கத் துறை இணை ஆணையருமான (ஐ.ஆா்.எஸ்) சு.சண்முகசுந்தரம் தன்னுடைய சொந்த செலவில் 2024-25-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் முதலிடம் பெற்ற ஏ.புவனேஷ், 2-ஆவது இடம் பெற்ற த.கனிமொழி, 3-ஆவது இடம் பெற்ற க.கண்ணன் ஆகியோருக்கு தலா 1 கிராம் தங்கக் காசும், அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற செ.அரிஷ்க்கு அரை கிராம் தங்கக்காசும் வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் தமிழ் படைப்பாளா்கள் சங்கச் செயலா் கோ.சக்திவேல், திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத் தலைவா் வெ.சௌந்தர்ராஜன், மாவட்ட முத்தமிழ்ச் சங்கத் தலைவா் முருக.குமாா், ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க துணைத் தலைவா் செல்வராஜ், தமிழாசிரியா் மா.தணிகாசலம் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.