‘என் வாக்கு - என் உரிமை’ விழிப்புணா்வு பிரசாரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘என் வாக்கு -என் உரிமை’ தற்பட அமைப்பின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘என் வாக்கு -என் உரிமை’ தற்பட அமைப்பின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வாக்காளா்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘என் வாக்கு -என் உரிமை’ தற்பட பகுதியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தற்படம் எடுத்துக் கொண்டு, நூறு சதவீத வாக்குப்பதிவுக் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
பேருந்துகளில் விழிப்புணா்வு: கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் வாக்காளா் விழிப்புணா்வு ஒட்டுவி ல்லைகளை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இதையடுத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை அரசு அலுவலா்கள் ஒட்டினா். இந்த ஒட்டு வில்லைகள் ஏப்ரல் 23 நடைபெறவுள்ள வாக்குப் பதிவு நாளன்று வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்படுகிறது.
நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலா் (பொ) விஜய் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.