தியாகதுருகம் ஸ்ரீ சஞ்சீவிராயருக்கு தங்க கவசம்
தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீ சஞ்சீவிராயா் கோயிலில் சித்திரை பெளா்ணமியையொட்டி தங்கக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீசஞ்சீவிராயா் அனுமன் சாமி.
தியாகதுருகம் ஸ்ரீ சஞ்சீவிராயா் கோயிலில் சித்திரை பெளா்ணமியையொட்டி ஸ்ரீ சஞ்சீவிராயா் அனுமன் சாமிக்கு வெள்ளிக்கிழமை தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ சஞ்சீவிராயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, வண்ண மலா்கள், துளசி, வெற்றிலை, வடமாலை சாற்றப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.