காரைக்கால் மீனவர்கள் போராட்டம்:சிறு படகுகள் கடலுக்குச் செல்ல அனுமத
காரைக்கால் மீனவர்கள் நடத்திவரும் போராட்டம் தளர்த்தப்பட்டு சிறு படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட. இருப்பினும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி மே 17-ம் தேதி காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம் நடத்த மீன
காரைக்கால் மீனவர்கள் நடத்திவரும் போராட்டம் தளர்த்தப்பட்டு சிறு படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட. இருப்பினும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி மே 17-ம் தேதி காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம் நடத்த மீனவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 26 பேர் கடந்த ஏப்.5-ம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறு படகு (பைபர்) மீனவர்கள் வேலை நிறுத்தம்,
Advertisement
Advertisement
ரயில் மறியல் போராட்டம், மீன் விற்பனை புறக்கணிப்பு போன்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தினர்.
இந்த நிலையில், சிறு படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் பாதிப்பதை கருத்தில்கொண்டு, சனிக்கிழமை முதல் அந்தப் படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சந்தைக்கு கோலா மீன்கள் விற்பனைக்கு வந்தன.
இருப்பினும் மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள், வரும் 17-ம் தேதி காரைக்காலில் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.