புதுச்சேரி

தங்கச் சங்கிலி பறித்த இளைஞர் போலீஸில் ஒப்படைப்பு

DIN

புதுவை அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு தப்பியபோது, விபத்துக்குள்ளாகி சிக்கிக் கொண்ட இளைஞர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
மடுகரையைச் சேர்ந்தவர் மணி (38). இவரது சகோதரி விஜயலட்சுமி விழுப்புரம் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். அரியாங்குப்பத்தில் வசித்து வரும் அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மணி திருவக்கரை காளியம்மன் கோயில் வழிபாடு நடத்த மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, இருவரும் மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்குப்பம் பத்துக்கண்ணு வழியாக அரியாங்குப்பம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர் பத்துக்கண்ணு பகுதியில் விஜயலட்சுமியிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதி அந்த மர்ம நபர் கீழே விழுந்தார். உடனே மணியும், விஜயலட்சுமியும் அங்கிருந்த பொதுமக்களுடன் இணைந்து மர்ம நபரைப் பிடித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர் செல்லிப்பட்டு தனம் நகரைச் சேர்ந்த ராஜா (எ) இளையராஜா (24) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் விஜயலட்சுமியிடம் வழிப்பறி செய்து 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT