புதுச்சேரி

உரிமம் பெறாத வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தினமணி

உழவர்கரை நகராட்சியில் வர்த்தக உரிமம் பெறாத நிறுவனங்கள் மீது நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
 இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் எம்.எஸ்.ரமேஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வர்த்தக உரிமம் பெறாமல் இயங்கி வரும் வர்த்தக நிறுவனங்கள் மீது ஜப்தி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 இதன் தொடர்ச்சியாக மேரி உழவர்கரை ரங்கா நகரில் இயங்கி வந்த பாரத் இண்டஸ்ட்ரியல் ஹார்டுவேர்ஸ், ஓம் சக்தி கம்ப்யூட்டர்ஸ், அஸ்வினி மெடிக்கல்ஸ் நிறுவனங்கள் மீது நகராட்சி ஆணையர் தலைமையில் ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்
 மேற்கண்ட மூன்று நிறுவனங்களிலும் அசையும் சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டன. இவ்வாறு நகராட்சி உரிமம் பெறாமல் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது ஜப்தி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT