புதுச்சேரி

கொடிநாளுக்காக 2011-ஆம் ஆண்டு முதல் புதுவை மாநிலம் அதிக வசூல் செய்துள்ளது: முதல்வர் பெருமிதம்

தினமணி

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிகபட்ச கொடிநாள் வசூலுக்கான கோப்பையை புதுச்சேரி பெற்று வருவதாக பெருமிதத்துடன் முதல்வர் வே.நாராயணசாமி குறிப்பிட்டார்.
 இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
 ஆண்டு தோறும் டிசம்பர் 7-ஆம் தேதி கொடிநாளாகக் கொண்டாடப்படுகிறது. இரவு - பகல் பாராது, மழை, வெயில், பனி உள்ளிட்ட கால நிலைகளைப் பொருட்படுத்தாது நமது நாட்டைக் காக்கும் ராணுவத்தினரை நாம்
 நினைவு கூரும் நாளாகும் இது.
 புதுவை யூனியன் பிரதேசம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் யூனியன் பிரதேசங்களிலேயே அதிகபட்ச கொடிநாள் வசூலுக்கான கோப்பை மற்றும் அதிகபட்ச தனிநபர் கொடிநாள் வசூலுக்கான கோப்பையைத் தொடர்ந்து பெற்று வருகிறது.
 நம்முடைய மாநில மக்கள் படை வீரர்களின் மீது கொண்டுள்ள மரியாதையின் விளைவாகத்தான் இந்தச் சாதனையை நிகழ்த்த முடிகிறது. நாம் இந்தக் கோப்பைகளைத் தொடர்ந்து பெற வேண்டும் என்பதே என் ஆவலாகும்.
 புதுவை யூனியன் பிரதேசத்தில் போர் வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவைகளுக்கான வாழ்வாதாரத் தொகையாக முறையே ரூ. 6,000 மற்றும் ரூ. 5, 000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் காட்டிலும் அதிகமாகும்.
 கடந்த ஆண்டு எனது தலைமையிலான அரசு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் நல்வாழ்வுக்காக ரூ. 85.74 லட்சத்தைச் செலவு செய்துள்ளது.
 நமது பாதுகாப்புக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் முப்படையினருக்கு நன்றி செலுத்தவும், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் பொதுமக்கள் அனைவரும் கொடிநாளுக்காக தாராளமாக நிதியளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT