புதுச்சேரி

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பெறும் பயனாளிகள் குறித்து ஆய்வு

தினமணி

உருளையன்பேட்டை தொகுதி திடீர் நகர் குடிசை மாற்று வாரியம் மூலம், புதிய குடியிருப்பு வழங்குவதற்காக பயனாளிகள் சான்றிதழ்கள்குறித்து எம்.எல்.ஏ.க்கள் இரா. சிவா, தீப்பாய்ந்தான் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
 திடீர் நகர் எனப்படும் அன்னை இந்திரா நினைவு குடியிருப்பில், குடிசைப் பகுதியில் வசிக்கும் 110 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் புதிய வீடு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரெட்டியார்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுக்கு வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டு அதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. வட்டாட்சியர் தயாளன், குடிசை மாற்று வாரிய முதன்மைச் செயல் அலுவலர் லாரன்ஸ் குணசேகரன், உடைமை அதிகாரி ராஜராஜன் வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 பிப்டிக் தலைவர் இரா. சிவா, குடிசை மாற்று வாரியத் தலைவர் தீப்பாய்ந்தான் ஆகியோர் கலந்து கொண்டு, சான்றிதழ் சரிபார்க்கும் பணியை மேற்பார்வையிட்டனர். தொடர்ந்து திடீர் நகர் பகுதியில் புதிய குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தனர். குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் தைரியாநாதன், சக்திவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT