புதுச்சேரி

தேசிய படைப்பாற்றல் போட்டி: புதுவை கல்லூரி மாணவிகள் சாதனை

தினமணி

தேசிய படைப்பாற்றல் போட்டியில் புதுவை மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்.
 ஸ்டாண்ட் இந்தியா அமைப்பு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன உபகரணங்களை கண்டுபிடிப்பதற்கான படைப்பாற்றல் போட்டியை நடத்தியது. இதில், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மின்னணுவியல், தொடர்பியல் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் தேசிய அளவில் 2 குழுக்கள் முதலிரண்டு இடங்களைப் பெற்றன.
 "அட்ரினோ' என்ற சாதனம் மூலம் கருவிழிகளைக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியை வழிநடத்தும் முறையை அனுப்பிரியா, பிரியதர்ஷினி, ரஞ்சிதா ஆகியோர் வடிவமைத்து முதல் பரிசையும், பேச்சு மற்றும் செவித்திறன் இழந்தவர்கள், தன் சைகைகள் மூலம் அனைவருக்கும் புரியும் வகையில் உதவும் கருவியான "ஹேண்ட் டாக்' சாதனத்தை செüந்தர்யா, ஜீவரேகா, சிவரஞ்சனி, திவ்யப்பிரியா, ஆஷா, தீக்ஷிதா, நந்தினி ஆகியோர் வடிவமைத்து இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
 புதுதில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இரு குழுவினருக்கும் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்வி.சுகுமாறன், செயலாளர் கே.நாராயணசாமி, இயக்குநர் கே.வெங்கடாசலபதி, துறைத் தலைவர் பி.ராஜா ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT