புதுச்சேரி

ரத்த தான தின விழிப்புணர்வுப் பேரணி

உலக ரத்த தானம் செய்வோர் தினத்தையொட்டி புதுவையில் புதன்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

தினமணி

உலக ரத்த தானம் செய்வோர் தினத்தையொட்டி புதுவையில் புதன்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
 உலக ரத்த தானம் செய்வோர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ரத்த தானம் செய்யுங்கள், இப்போதே செய்யுங்கள், தொடர்ந்து செய்யுங்கள் என்ற கருத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 இதை முன்னிட்டு புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் புதுச்சேரி ரத்த மாற்றுக் கழகம் சார்பில் ரத்த தானத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
 கடற்கரை சாலையில் பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடக்கி வைத்தார்.
 இதில், 300-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வ ரத்த தானம் செய்பவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ரத்த தானம் செய்வதின் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 கடற்கரை காந்தி சிலையில் தொடங்கிய பேரணி புஸ்ஸி வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று காந்தி சிலையில் நிறைவுபெற்றது.
 சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் தலைமை வகித்தார். தேசிய சுகாதாரத் துறை இயக்குநர் காளிமுத்து, புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT