புதுச்சேரி

மத்திய அமைச்சர்களுடன் நாராயணசாமி சந்திப்பு

தினமணி

புதுச்சேரி மாநில கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு மத்திய அமைச்சர்களை முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
 அரசுமுறைப் பயணமாக புதுதில்லி சென்றுள்ள நாராயணசாமி, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்ஜே. அக்பரைச் சந்தித்து, காரைக்காலில் அஞ்சல் நிலையம் மூலம் கடவுச் சீட்டு பெறும் திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றதும், அதன் தொடக்க விழா நடத்துவது தொடர்பாகவும் கலந்து பேசினார்.
 பின்னர் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இணையமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து புதுச்சேரியில் பயிற்சி மையம் அமைக்க ரூ.125 கோடிக்கும், தொழில் ஆதார மையம் அமைக்க ரூ.125 கோடிக்கும் ஒப்புதல் பெற்றார். இந்தத் திட்டங்களுக்கான தொடக்க விழா நடத்துவது தொடர்பாகவும் கலந்து பேசினார்.
 இதனைத் தொடர்ந்து, மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவை சந்தித்து புதுச்சேரியில் ஆன்மிகச் சுற்றுலா மற்றும் பாரம்பரியச் சுற்றுலா திட்டங்களுக்கான அனுமதியை பெற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT