புதுச்சேரி மாநில அமெச்சூர் ஹேண்ட்பால் சங்கம், வில்லியனூர் மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 38-வது தென்மண்டல சாம்பியன்ஷிப் போட்டிகள், திருக்கனூர் சுப்பிரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
வரும் 27-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளை முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைக்கிறார். அமைச்சர்கள் மல்லாடி, கமலக்கண்ணன், மாநில சங்கத் தலைவர் ஏ.காந்திராஜ், போட்டிக்குழுத் தலைவர் எம்.சம்பத் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
புதுவை, தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநில அணிகள் கலந்து கொள்கின்றன. நிறைவு விழா, இறுதிப் போட்டிகள் சனிக்கிழமை மாலை நடை
பெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.