புதுச்சேரி சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 23-இல் தொடங்கும்: முதல்வர் நாராயணசாமி தகவல்
புதுவையில் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23-ஆம் தேதி தொடங்கும். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிபுதுச்சேரி சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 23-இல் தொடங்கும்: முதல்வர் நாராயணசாமி தகவல்
புதுவையில் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23-ஆம் தேதி தொடங்கும். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23-ஆம் தேதி தொடங்கும். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டபேரவை கமிட்டி அறையில் அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை இரவு நடந்தது.
முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயலர் அஸ்வனி குமார், நிதித்துறை செயலர் கந்தவேலு, கவர்னர் செயலர் தேவநீதி தாஸ், அரசு செயலர்கள் சுந்தரவடிவேலு, மிகிர் வரதன், ஜவகர், மணிகண்டன், பார்த்திபன், சட்டத்துறை செயலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், முன்னாள் தலைமை செயலரை பாராட்டியும், புதிய தலைமை செயலரை வரவேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது சம்பந்தமாகவும், அரசு இடங்களில் விழா நடத்துவதற்கான கட்டண நிர்ணயம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைச்சரவை கூட்டத்தில் புதிய தலைமைச் செயலரை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றினோம். முன்னாள் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா 2 ஆண்டுகள் புதுவையில் பணி புரிந்துள்ளார்.
அவர் சிறப்பான முறையில் மாநில வளர்ச்சிக்காக எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளார். கடந்த ஆட்சியிலும் செயல்பட்டு இருக்கிறார். அவர் மாநில வளர்ச்சிக்காவும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் சேவையை பாராட்டியும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்ததுவது சம்மந்தமாக ஆலோசனை செய்தோம். வரும் நவ.23-ஆம் தேதி சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் துவங்கி நடைபெறும்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்னை, நிதி ஆதாரம், மக்கள் நலத்திட்ட பிரச்னை குறித்து விவாதிக்கப்படும். இது குறுகிய காலம் கொண்ட இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை பேரவைத் தலைவர் அறிவிப்பார்.
புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்கப்படும்.
இ-ஸ்டாம்ப் பயன்பாட்டில் மாற்றம் கொண்டுவருவது குறித்தும் ஆலோசித்துள்ளோம்.
அரசு இடங்களில் விழா நடத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம்.
ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழு பரிந்துரையின் அடிப்படையில் வியாபார ரீதியாக ஏஎப்டி மைதானத்துக்கு ரூ.75 ஆயிரமும், அரசியல் மற்றும் மத சம்பந்தமான விழாக்களுக்கு ரூ.40 ஆயிரமும், சர்க்கஸ் நடத்துவதற்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதேபோல் துறைமுகத்தில் உள்ள மைதானத்துக்கு ரூ.40 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என முடிவு செய்யப்பட்டது.
அந்த இடத்தை பயன்படுத்துபவர்களுக்கு ஏதுவாக இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
வாரியத் தலைவர் பதவி உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கிரண்பேடி கூறியது குறித்து கேட்டபோது, இது சம்பந்தமாக வெள்ளிக்கிழமை அறிக்கை கொடுப்பேன் என்றார்.