புதுச்சேரி

எம்எல்ஏக்களுக்கு வாகனம் ஓட்டுவது குறித்து ஆய்வு நடத்த ஆளுநர் கிரண் பேடி உத்தரவு

DIN

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக
(பிஆர்டிசி) ஓட்டுநர்கள் எம்எல்ஏக்களுக்கு வாகனங்கள் ஓட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
பிஆர்டிசியில் பணியாற்றும் ஓட்டுநர்கள் பலர் அரசியல்வாதிகளின் சொந்த வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதுகுறித்து துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு புகார் வந்தது. அதில், 37 பிஆர்டிசி ஓட்டுநர்கள் எம்எல்ஏக்களுக்கு வாகனம் ஓட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, போக்குவரத்து ஆணையர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், துறைச் செயலர் இது உண்மைதானா என உறுதிப்படுத்த வேண்டும், யார் இதற்கு அனுமதி கொடுத்தது? அந்த ஓட்டுநர்களுக்கு யாருடைய பணம் சம்பளமாக வழங்கப்படுகிறது? எந்தெந்த ஓட்டுநர்கள் எம்எல்ஏக்களுக்கு ஓட்டுநர்களாக பணி புரிகின்றனர்? என்று
தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT