கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் புதன்கிழமை சட்டப்பேரவை நோக்கி பேரணி நடைபெற்றது.
பாசிக் ஏஐடியூசி ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும், நிரந்தர ஊழியர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் சம்பளம் வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், அரசு நிர்யணத்துள்ள தினக்கூலி ஊதியத்தை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் இதரபடிகளை முழுவதும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன பேரணி செல்ல முடிவு செய்தனர். அதன்படி, புதன்கிழமை பாசிக் ஊழியர்கள் புதுவை சுதேசி மில்லில் இருந்து முக்கிய சாலை வழியாக பேரணியாக சட்டப்பேரவை நோக்கிச் சென்றனர்.
ஏஐடியூசி செயல் தலைவர் நாரா.கலைநாதன், தலைவர் அபிஷேகம், பொதுச் செயலாளர் தினேஷ் பொன்னையா, கெளரவத் தலைவர் சேதுசெல்வம், துணைத் தலைவர் ரமேஷ், பொருளாளர் தரணிராஜ், செயலாளர் முத்துராமன் உள்பட நிர்வாகிகள், பாசிக் ஊழியர்கள்பலர் கலந்துகொண்டனர். மிஷன் வீதி மாதா தேவாலயம் அருகே பேரணியை பெரியகடை போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அதையடுத்து அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.