புதுச்சேரி

புதுவையில் மீன்பிடி தடைக் காலம் தொடக்கம் 

தினமணி

புதுவை மாநிலத்தில் மீன் பிடி தடைக் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 மீன் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் இனவிருத்தியை கருத்தில் கொண்டு 61 நாள்கள் மீன் பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 இதையடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
 இதனால், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உள்ள வீரானம்பட்டினம், நல்லவாடு, புதுக்குப்பம் உள்பட 18 மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
 மீன்பிடி தொழில் நிறுத்தப்பட்டதால் மீன் பிடி துறைமுகங்கள் மூடப்பட்டன. மீன்பிடி தடைக் காலம் வரும் ஜூன் 14 வரை அமலில் இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT