புதுச்சேரி

நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் 

தினமணி

புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 உலக நுகர்வோர் தினத்தையொட்டி அரசு குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, புதுச்சேரி இணைந்து, உலக மனித உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் பயிலரங்கம் நடைபெற்றது.
 புதுச்சேரி குயவர்பாளையத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்க நிகழ்ச்சிக்கு இயக்க பொதுச் செயலாளர் இரா.முருகானந்தம் தலைமை வகித்தார். குடிமைப்பொருள் வழங்கல்துறை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் பயிலரங்கை தொடக்கிவைத்தார்.
 தமிழ்நாடு நுகர்வோர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் புது ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நுகர்வோர் சட்டங்கள், நுகர்வோரைஅடிமைப்படுத்தி வரும் போலி விளம்பரங்கள், போலி விளம்பரங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது, போலி விளம்பரங்கள் மூலம் பாதிக்கப்படும் நுகர்வோர் அந்நிறுவனத்திற்கு எதிரான என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம், பொதுவாக நுகர்வோர் பாதிக்கப்படும்போது தீர்வு காண நுகர்வோர் நீதிமன்றத்தில் எப்படி மனு தாக்கல் செய்யலாம் என்பது குறித்து விளக்கிப் பேசினார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT