காவிரி: ஐ.நா. சபைக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஐ.நா. சபைக்கு விரைவு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தை விழித்தெழுந்த தமிழர் மாணவ இளைஞர் பேரவை மற்றும் திருநங்கையர் செவ்வாய்க்கிழமை நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஐ.நா. சபைக்கு விரைவு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தை விழித்தெழுந்த தமிழர் மாணவ இளைஞர் பேரவை மற்றும் திருநங்கையர் செவ்வாய்க்கிழமை நடத்தினர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரியில் விழித்தெழுந்த தமிழர் மாணவ இளைஞர் பேரவையின் தலைவர் ரமேஷ் தலைமையில் இளைஞர்கள், திருநங்கைகள், மாணவர்கள் என 75 பேர் புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் வந்தனர். அவர்கள் அங்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் ஐ.நா.சபைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, விரைவு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அறப்போராட்டம் நடத்துவோம் என்றனர்.