சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு
புதுவை சட்டப்பேரவையில் உள்ள அமைச்சரவை அலுவலகத்தில் முதல்வர் வே.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
புதுவை சட்டப்பேரவையில் உள்ள அமைச்சரவை அலுவலகத்தில் முதல்வர் வே.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. இதனால் கோப்புகள் அதிகாரிகளின் அலுவலகங்களிலேயே பல நாள்களாக தேங்கிக் கிடக்கின்றன. அதனால், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகிறது. இது குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அடுத்து முதல்வர் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது செயலர்கள் உள்ளிட்ட 70 சதவீதம் பேர் வராதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தாமதமாக வருபவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
அதனால், செவ்வாய்க்கிழமையாவது அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வருகிறார்களா? என முதல்வர் அலுவலகம் சார்பில் கண்காணிக்கப்பட்டது. முதல்வரின் ஆய்வுக்கு முழு பலன் கிடைக்காவிட்டாலும் ஓரளவு பலன் இருந்தது. அதாவது 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் 8.45க்கு வந்திருந்தனர். மேலும், 8.45 மணியை தாண்டிய நேரத்தில் பல ஊழியர்கள் பரபரப்புடன் சரியான நேரத்துக்கு இருக்கைக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக அவசர, அவசரமாக வந்தனர்.
அதேநேரத்தில் முதல்வர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் உள்ள அமைச்சரவை அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு பெரும்பாலான ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வந்திருப்பதைப் பார்த்து திருப்தியுடன் சென்றார்.