புதுச்சேரி

புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு 

தினமணி

புதுச்சேரியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பாஜக எம்எல்ஏவின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.
 புதுவை மாநில பாஜக பொருளாளரான கே.ஜி.சங்கர் துணைநிலை ஆளுநரின் பரிந்துரையின் பேரில் நியமன எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டார். இவர் புதுச்சேரி இளங்கோ நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கார் கடந்த 4 நாள்களாக வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது.
 சங்கரின் மனைவி வியாழக்கிழமை காலை வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.
 இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு சங்கரின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் காரின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது. தகவலறிந்த பாஜகவினர் சங்கரின் வீட்டின் முன் திரண்டனர்.
 இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கட்சித் தலைமையின் அழைப்பின் பேரில், தில்லி சென்றுள்ள சங்கருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. நியமன எம்.எல்.ஏ. சங்கர் தில்லியில் முகாமிட்டிருப்பதை அறிந்த எதிர்க்கட்சியினர் மர்ம நபர்களைத் தூண்டிவிட்டு, கார் கண்ணாடியை உடைத்துள்ளதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT