புதுச்சேரி

ஸ்பின்கோ ஆலைக்கான பஞ்சை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

DIN

திருபுவனை கூட்டுறவு நூற்பாலைக்குத் (ஸ்பின்கோ) தேவையான பஞ்சை அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என ஏஐடியூசி புதுவை பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  
 இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் டி. ரவி தலைமை வகித்தார். செயலாளர் வி.எஸ். அபிஷேகம் எதிர்கால நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். 
தீர்மானங்கள் விவரம்:  திருபுவனை கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ)யின் நஷ்டத்துக்குக் காரணமான ஊழல்கள் விசாரிக்கப்பட்டு, ஆலையின் பணத்தை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலைக்குத் தேவையான பஞ்சை அரசே நேரடியாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும். ஆலையை தனியாரிடம் வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
ஏஎஃப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 4 மாத சம்பளத்தையும், போனûஸயும் உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2013 நவம்பர் 28-இல் புதுவை அமைச்சரவை முடிவு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பிய கோப்பின்படி, ஏஎஃப்டிக்குச் சொந்தமான பட்டானூர் இடத்தை விற்பனை செய்திட ரூ. 500 கோடியை மத்திய அரசிடமிருந்து மானியமாகப் பெற புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏஎஃப்டி, சுதேசி, பாரதி உள்ளிட்ட அனைத்து பஞ்சாலைகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 2013-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படாமல் உள்ள பணப் பலன்கள், நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் துணைத் தலைவர்கள் ஆர். பூபதி, மு. சுப்பையா, என். கிருஷ்ணமூர்த்தி, எஸ். திருஞானமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT