புதுச்சேரி

குளிர் பருவ காய்கறிகளை சாகுபடி செய்து விவசாயி சாதனை

தினமணி

புதுச்சேரி மண்ணாடிபட்டில் குளிர் பருவ காய்கறிகளை சாகுபடி செய்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
 மலைப் பிரதேசத்தில் விளையும் காலி பிளவர், பீன்ஸ், கோசு, நுôக்கல், பீட்ருட் போன்றவற்றை புதுச்சேரியிலும் சாகுபடி செய்ய முடியும் என்பதை மண்ணாடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆதி நாராயணன் நிரூபித்துள்ளார்.
 கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக் காய்கறிகளான வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றை பயிரிட்டு வந்ததாகவும், குளிர் பருவ காய்கறிகளான காலி பிளவர், கோசு ஆகியவற்றை கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் பயிரிட்டு நல்ல லாபத்தை ஈட்டியதாகவும் தெரிவித்தார். கூடுதலாக நிகழாண்டு நுôக்கல், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை பயிரிட்டு நல்ல விளைச்சலை பெற்றுள்ளார்.
 தற்போது, மண்ணாடிப்பட்டில் விளைந்துள்ள குளிர் பருவ காய்கறிகளை விவசாயிகள் நேரடியாக பெற்று குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர். மற்ற விவசாயிகளும் குளிர் பருவ காய்கறிகளை பயிரிட முன்வந்தால், புதுவை மக்களுக்கு குறைந்த விலையில் காலி பிளவர், பீன்ஸ், கோசு, நுôக்கல், பீட்ருட் ஆகியவை கிடைக்கும் என்கிறார் ஆதிநாராயணன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT