புதுச்சேரி

நீர்ப்பாசன மேம்பாடு: புதுவை ஆளுநர் - அமெரிக்க தூதர் கலந்துரையாடல் 

தினமணி

புதுவை மாநிலத்தில் நீர்ப்பாசன மேம்பாடு தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டருடன், புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கலந்துரையாடினார்.
 அமெரிக்காவுக்கான இந்திய தூதர் கென்னத் ஜஸ்டர், சென்னை துணை தூதர் ராபர்ட் பர்கஸ் ஆகியோர் புதுவை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கிரண் பேடியை புதன்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
 புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓடும் நதிகளை மத்திய அரசின் நீர்கொள்கைக்கு ஏற்ப சீரமைத்தல், நீர்ப்பாசன பரப்பை அதிகரித்தல், வேளாண் சாகுபடி அதிகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக விவாதித்தனர்.
 மேலும், அமெரிக்க தூதரக உதவியுடன் புதுவை கிராமங்களில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி பயிற்றுவித்தல், கற்றல் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
 இதுபோன்ற அமெரிக்க-இந்திய பிணைப்பு தொடக்கமாக இருந்தாலும், இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்தார்.
 நிகழ்ச்சியின்போது மாநில அரசின் தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT