புதுச்சேரி ஆசிரமத்தில் அன்னை பிறந்த நாள் விழா
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் சர்வதேச நகரை அமைத்தவர் அன்னை மிர்ரா. இவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் 21.2.1878-ல் பிறந்தார். அன்னையின் இயற்பெயர் மிர்ரா அன்போன்ஸா ஆகும். சிறிய வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் ஆன்மிக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1914-இல் புதுச்சேரி வந்தார்.
அன்னையின் முயற்சியால்தான், அரவிந்தர் ஆசிரமும், ஆரோவில் சர்வதேச நகரமும் தோற்றுவிக்கப்பட்டது.
அன்னையின் 140-ஆவது பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அன்னை வசித்த அறை பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது. இதை அவரது சீடர்கள் ஏரளாமானோர் பார்த்துச் சென்றனர்.
மேலும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னை சமாதியை பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பின்னர் தியானமும் மேற்கொண்டனர்.
அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தன.