புதுச்சேரி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: புதுவை மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை சமர்பிப்பு

தினமணி

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதுவை மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
 குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள குஜராத் மாநில அறிவியல் மையத்தில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.27 தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.
 இதன் தொடக்க விழாவில் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி கலந்துகொண்டு அனைத்து மாநில குழந்தைகளை வரவேற்று சிறப்புரையாற்றினார். புதுச்சேரி மாநில குழந்தைகள் அறிவியல் மையத்தில் புதுச்சேரி மாநில மரமான வில்வ மரத்தை நட்டனர். புதுச்சேரி பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, புனித சூசையப்பர் குளூனி மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து தலா 2 ஆய்வறிக்கைகளையும், காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, மாஹே எக்சல் பப்ளிக் பள்ளிகளிலிருந்து தலா ஒரு ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டன.
 இவர்களுடன் புதுச்சேரி அறிவியல் இயக்க துணைத் தலைவர் சேகர் மற்றும் மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். வழிகாட்டி ஆசிரியர் காட்டேரிக்குப்பம் அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் கலந்துகொண்டார்.
 குழுவினர் தேசிய அளவிலான பொது ஆய்வறிக்கை கலந்தாய்வுக் கூட்டத்திலும் மற்றும் புதுச்சேரி மாநில ஆண்டறிக்கைகளையும் சமர்பித்தனர். மாநாட்டில் அனைத்து மாநிலங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளும், பிலிப்பைன்ஸ், கம்போடியா, குவைத், பஹ்ரைன் உள்பட 10 நாடுகளிலில் இருந்தும் ஆய்வறிக்கைகள்
 சமர்பிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT