புதுச்சேரி

ஜீவா நினைவு தினம்: அரசு, கம்யூனிஸ்ட் சார்பில் மரியாதை 

தினமணி

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தலைவர்களுள் ஒருவராக இருந்து மறைந்த ஜீவானந்தத்தின் நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சார்பிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 புதுச்சேரியில் ஜீவானந்தத்தின் 55-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள ஜீவாவின் உருவச்சிலைக்கு அரசின் செய்தி - விளம்பரத் துறை சார்பில் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அந்தக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், துணைச் செயலர்கள் சலீம், ராமமூர்த்தி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கீதநாதன், சேது செல்வம், தினேஷ் பொன்னையா, ஏஐடியுசி தலைவர் வி.எஸ்.அபிஷேகம், தொகுதி செயலர்கள் துரை.செல்வம், சுப்பையா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில் அதன் மண்டலத் தலைவர் ராசு, செயலர் அறிவழகன், பொதுக் குழு உறுப்பினர் விலாசினி ராசு உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT