நெசவாளர் குடியிருப்பில் தேங்கிய குப்பைகள் அகற்றப்படுமா?
புதுவை மாநிலம், நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதுவை மாநிலம், நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்புப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பின் நுழைவுப் பகுதியில் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் குவிந்துள்ளன. இதனால், சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
அந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகள் கொட்ட தடை செய்யப்பட்ட பகுதி என பதாகை வைக்க வேண்டும். குவிந்துள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.