புதுச்சேரி

உடனடி அபராதத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த ஆளுநர் உத்தரவு

DIN

புதுவையில் உடனடி அபராத திட்டத்தை (ஸ்பாட் பைன்) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
புதுவை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கிரண் பேடி தலைமையில்  போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள்,  காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெளியிட்ட பதிவு: 
புதுவையில் போக்குவரத்து விதிமீறல்களை போக்குவரத்துத் துறையும்,  போக்குவரத்து போலீஸாரும் இணைந்து கண்காணிக்க உள்ளனர்.  இவர்கள் விதி மீறுவோர் மீது உடனடி அபராதம் விதிக்க உள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு அரசாணையின்படி உதவி ஆய்வாளர்,  வாகன ஆய்வாளர்கள் உடனடி அபராதத்தை விதிக்க அதிகாரம் உள்ளது. அபராதம் விதிப்பை கணினியில் பதிவு செய்யவேண்டும்.  மீண்டும் தவறிழைப்போர் மீது அபராதத்தை அதிகப்படுத்த வேண்டும்.  இருசக்கர வாகனத்தில் மூவர் பயணிப்பது, அதிவேகத்திலும், தலைக்கவசம் அணியாமலும் வாகனத்தை ஓட்டுவது,  ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது,  வாகன நிறுத்தத்தில் மோசமாக வாகனம் நிறுத்துவது,  வாகனம் நிறுத்தம் இல்லா இடங்களில் வாகனம் நிறுத்துவது போன்றவை அபராதம் விதிக்கப்படும் தவறுகளுக்கான உதாரணங்கள்.
சாலை விதிகளை கடைப்பிடிப்பது உங்களுக்காக மட்டுமன்றி சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்காகவும் தான் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
கூட்டத்தில் போக்குவரத்து செயலர் ஹெச்.பி.எஸ். ஸ்ரன்,  காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால்,  போக்குவரத்து ஆணையர் ஏ.எஸ்.சிவக்குமார்,  போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் சி.மாறன், ஆளுநரின் கூடுதல் செயலர் சுந்தரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT