புதுச்சேரி

கஜா புயல்: 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

DIN

கஜா புயலை எதிர்கொள்ள 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 கஜா புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக, முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,  வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்,  வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜகான்,  தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும்  அனைத்துத் துறைச் செயலர்கள்,  மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்துக்குப் பிறகு  முதல்வர் நாராயணசாமி   செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 கஜா புயலை எதிர்கொள்ள புதுவை அரசு  அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 
 தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து,  அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 மேலும்,  புயலை எதிர்கொள்ள  24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக, தாழ்வான பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.  
கஜா புயலால் காரைக்காலில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால்,  புயலை எதிர்கொள்வது தொடர்பாக காரைக்காலில் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்படும்.
  மழை பாதிப்புக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT