புதுச்சேரி

போலி நபர்களுக்கு புயல் நிவாரணம் வழங்குவதை தடுக்க கடும் நிபந்தனைகள்: கிரண் பேடி அதிரடி

தினமணி

புதுவையில் போலி நபர்களுக்கு புயல் நிவாரணம் வழங்குவதை தடுக்கும் வகையில், கடுமையான நிபந்தனைகளை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி விதித்துள்ளார்.
 புதுவையில் மழை, புயல் உள்ளிட்ட பாதிப்புகளின்போது, பாதிக்கப்பட்டோர் மட்டுமன்றி, அரசியல் செல்வாக்கு உடையவர்கள் பாதிப்புகளே இல்லாமல் நிவாரணம் பெறுவதும் இருந்து வருகிறது. இதுபற்றி ஆளுநர் கிரண் பேடிக்கு புகார்கள் சென்றன.
 இதையடுத்து, போலியான நபர்களுக்கு நிவாரணம் அளிப்பதை தடுக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் கிரண் பேடி கூறியதாவது:
 கஜா புயல் சேதங்களை ஆட்சியர்கள் தலைமையிலான குழு மதிப்பிட வேண்டும். மத்திய அரசு விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்ட இடங்களின் புகைப்படங்கள், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை பட்டியலில் இணைக்க வேண்டும். பாதிப்பு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.
 புயல் நிவாரணம் கோரி காலதாமதாக விண்ணப்பித்தால் அதை ஏற்க இயலாது. சேதங்கள் அனைத்தும் ஆதார அடிப்படையில்தான் கணக்கில் கொள்ளப்படும். எனவே, சேதாரத்திற்குரிய புகைப்படம், விடியோக்களை அதிகாரிகள் தங்களிடம் உள்ள ஸ்மார்ட் செல்லிடப்பேசியில் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும்போது புகைப்படம் மற்றும் விடியோ பதிவுக்கான தேதியும், நேரமும் பதிவாகி இருக்கவேண்டும்.
 சேதங்கள் குறித்த புகைப்படம் விடியோக்களை வருவாய்த் துறையினர் காலதாமதமின்றி அனுப்ப வேண்டும்.
 மத்திய அரசுக்கு அனுப்ப இந்த ஆதாரங்கள் கண்டிப்பாக தேவை என்றார் கிரண் பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT