புதுச்சேரி

புதுவை அரசு சார்பில் ரூ.100 கோடி பிணையப் பத்திரங்கள் ஏலம்

DIN

புதுவை அரசு சார்பில், ரூ. 100 கோடி பிணையப் பத்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக மாநில அரசின் நிதித் துறைச் செயலர் கந்தவேலு தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு மொத்தம் ரூ.100 கோடி மதிப்புள்ள 4 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன் வந்துள்ளது. இந்தப் பிணையப் பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரத்துக்கும், அதன் பின்னர் ரூ. 10 ஆயிரத்தின் மடங்குகளிலும் ஏலம் விடப்படும். 
இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் அக்டோபர் 16-ஆம்  தேதி இந்த ஏலத்தை நடத்துகிறது. ஆர்வமுள்ளவர்கள், நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள், பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் முதலியன ஓர் கூட்டுப் போட்டியில்லா ஏலத்தை அவரைச் சார்ந்த அனைத்து கூறுகளுக்கும் மின்னணு முறையில் பேசி முடிவு செய்து இந்திய ரிசர்வ் வங்கியின் உள்பிரிவு வங்கியில் தீர்வு மூலம் ( ஸ்ரீர்ழ்ங் க்ஷஹய்ந்ண்ய்ஞ் ள்ர்ப்ன்ற்ண்ர்ய் (உ-ஓன்க்ஷங்ழ்) மும்பை கோட்டையில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதள முகவரியில் 
(ஜ்ஜ்ஜ்.ழ்க்ஷண்.ர்ழ்ஞ்.ண்ய்) வருகிற 16-ஆம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டி ஏலத்தில் பங்கு பெறும் உறுப்பினர்கள் மின்னணு முறையில்  உ-ஓன்க்ஷங்ழ் மூலம் அன்று முற்பகல் 12 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏலத்தின் முடிவுகள் 16-ஆம் தேதியே மும்பை கோட்டையில் உள்ள ரிசர்வ் வங்கி தனது இணையதள முகவரியில் வெளியிடும். ஏலம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணையப் பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசர்வ் மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத் தக்க வகையில் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை அக்டோபர் 17-ஆம் தேதி வங்கி பணி நேரம் முடிவதற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அரசு பிணையப் பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படக் கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது ஏப்ரல் 17-ஆம் தேதி, அக்டோபர் 
17-ஆம் தேதிகளில் வழங்கப்படும். இந்தப் பிணையப் பத்திரங்கள் மாற்றிக் கொடுக்கத் தக்க தகுதியுடையதாகும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT