முதியவரிடம் நூதன முறையில் தங்க நகைகள் திருட்டு
புதுச்சேரியில் முதியவரிடம் நூதன முறையில் தங்க நகைகளை திருடிச் சென்ற இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் முதியவரிடம் நூதன முறையில் தங்க நகைகளை திருடிச் சென்ற இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (86). சனிக்கிழமை ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள வங்கிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இவரிடம் பேச்சுக் கொடுத்த இரு இளைஞர்கள், தற்போது திருட்டு பயம் அதிகரித்து விட்டதால், கழுத்திலுள்ள தங்க சங்கிலி, மோதிரத்தைக் கழட்டி பையில் வைத்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினராம். இகையடுத்து, தன்னுடைய மூன்றே முக்கால் பவுன் தங்கச் சங்கிலி, மோதிரத்தை அருணாச்சலம் கழட்டினாராம். உடனே அந்த இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்த காகிதத்தில் அதை வைத்து மடித்து முதியவரின் பையில் வைப்பது போல் வைத்தனராம்.
இதையடுத்து வீடு திரும்பிய அருணாச்சலம் கைப்பையை திறந்து பார்த்தபோது, அதில் காகிதத்தில் மடித்துவைக்கப்பட்ட தங்க நகைகள் இல்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதியவர் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், பெரியக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.