துளிர் திறனறிதல் போட்டி: 300 பேர் பங்கேற்பு
புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற துளிர் திறனறிதல் போட்டியில் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற துளிர் திறனறிதல் போட்டியில் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
புதுவை அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வை நடத்தி வருகிறது. லாசுப்பேட்டை, அரியாங்குப்பம், பாகூர், மேட்டுப்பாளையம் ஆகிய மையங்களில் இளநிலை மற்றும் முதுநிலை என இரு பிரிவுகளாக இந்தத் தேர்வு நடைபெற்றது.
புதுவையின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300 மாணவர்கள் தேர்வை எழுதினர். தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் அறிவியல் மாத இதழான துளிர், ஜந்தர் மந்தர் ஒராண்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.
முதல் பத்து இடங்களைப் பெறும் மாணவர்கள் மற்றும் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானிகளுடன் சந்திப்பு, கேடயம் வழங்கப்படும்.
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாகவும், பயிற்சி பெறும் வகையிலும் இருந்து வரும் இந்தத் தேர்வில் தமிழகம் மற்றும் புதுவை முழுதும் லட்சக் கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர் என துளிர் இல்லங்களின் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெயந்தி, அரவிந்தன், பிரசாந்த், திவ்யா, மங்களம் ஆகியோர் செய்திருந்தனர்.