புதுச்சேரி

விவசாயிகளுக்கு பார்த்தீனியம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி

DIN

புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில், விவசாயிகளுக்கு பார்த்தீனியம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் கரியமாணிக்கத்தில் நடைபெற்றது.
அகில இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆர்) அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி விவசாயிகளுக்கு ஆகஸ்ட் 16 முதல் 22-ஆம் தேதி வரை பார்த்தீனியம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில், புதுச்சேரி கரியமாணிக்கம் உழவர் உதவியகத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு பார்த்தீனியம் பாதிப்பும், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அ.ராமமூர்த்தி, பயிற்சியைத் தொடக்கிவைத்து, பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் குறித்த முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார்.
பார்த்தீனியம் பாதிப்பும், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் என்ற தலைப்பில் உழவியல் நிபுணர் சு.ரவி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மேலும், களைக்கொல்லி மூலமாக எவ்வாறு பார்த்தீனியத்தை அழிப்பது என்பது குறித்த செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் வேளாண் துணை இயக்குநர் வ.ராஜேஸ்வரி, வேளாண் அலுவலர் கு.சிவக்குமார், கரியமாணிக்கம் உழவர் உதவியக களப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT